எனது கேப்டன் பதவி: கை கழுவிய தோனி!


Caston| Last Modified புதன், 8 ஜூன் 2016 (12:11 IST)
இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சென்று அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று இரவு கிளம்பியது.

 
 
நேற்று இரவு ஜிம்பாப்வேக்கு புறப்பட்டு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் தோனி தனது கேப்டன் பதவி குறித்து கூறினார். எதிர்காலத்தில் தான் கேப்டன் பதவியில் நீடிக்க வேண்டுமா என்பதை தன்னால் முடிவெடுக்க முடியாது எனவும், இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் முடிவெடுக்கும் என கூறினார்.
 
மேலும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர இருப்பவர் வீரர்களை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார். தற்போது அசுர பார்மில் இருக்கும் இந்திய வீரர் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக வர வேண்டும் என கோரிக்கை மெதுவாக ஆரம்பித்துள்ள வேளையில் தோனி இவ்வாறு கூறியுள்ளது, பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது.
 
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில் கோலி, ரோஹித், தவன், அஸ்வின் என முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுடன் தோனி சென்றுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :