என்ன இருந்தாலும் தல போல வருமா! – வைரலாகும் தோனியின் தொடர் சிக்ஸர்கள்!

Dhoni
Prasanth Karthick| Last Modified புதன், 23 செப்டம்பர் 2020 (09:30 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்க் ஆடியபோது தோனி அடித்த தொடர் சிக்ஸர்கள் வைரலாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 200 ரன்களின் சிஎஸ்கே தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலாவதாக களம் இறங்கிய முரளி விஜய், வாட்சன் ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட் ஆக டூ ப்ளெஸிஸ் தன்னால் இயன்ற அளவு ஆட்டத்தை இழுத்து பிடித்தார். பின்னதாக களம் இறங்கிய கெயிக்வாட் இறங்கி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

இந்நிலையில் கேப்டன் தோனி கடைசியாக களம் இறங்கியபோது ரன்களை அதிகப்படுத்த வேண்டிய சூழல். கடைசி ஓவரில் அதிரடியாக களம் இறங்கிய தோனி வரிசையாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை அடித்து ரன்ரேட் வித்தியாசத்தை நெருக்கி கொண்டுவந்தார். சிஎஸ்கே தொற்று இருந்தாலும் இறுதி ஓவரில் தோனியின் அதிரடி மூன்று சிக்ஸர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Video Courtesy: iplt20.com


இதில் மேலும் படிக்கவும் :