போலிஸ் அதிகாரி மீது தோனி மான நஷ்ட வழக்கு!
தோனி சி எஸ் கே அணிக்காக விளையாடிய போது அந்த அணி சூதாட்டக் குற்றச்சாட்டில் சிக்கி 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
அப்போது அந்த வழக்கை விசாரித்து வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார். அவருக்கு நீதிமன்றம் தோனி பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதையும் மீறி அவர் நீதிமன்றத்தில் தோனி மீது புகாரளித்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மீறியதாக சம்பத்குமார் மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என தோனி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.