ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (09:47 IST)

விட்றாதீங்க யப்போவ்… தோனிக்காக வேண்டிய மகள்! – வைரலாகும் புகைப்படம்!

நேற்று நடந்த சிஎஸ்கே, டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான போட்டியில் தோனியின் மகள் வெற்றிக்காக பிரார்த்திக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அரபு அமீரகத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் என்பதால் இந்த போட்டி வெகுவாக உற்று நோக்கப்பட்டது.

இந்நிலையில் முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவதற்கு முன்பே 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதனால் தரவரிசையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியின்போது இதை பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கே கேப்டன் தோனியின் மகள் ஜியா பரபரப்புடன் நகங்களை கடித்துக் கொண்டே இருந்தார். பின்னர் தந்தையின் அணி வெற்றி பெற வேண்டும் என கைக்கூப்பி வேண்டிக் கொண்டிருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.