திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 6 மே 2023 (19:04 IST)

வின்னிங் ஷாட் அடித்த தல தோனி.. சிஎஸ்கே அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம்..!

Dhoni
இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து புள்ளி பட்டியல் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. 
 
இதனை அடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 13 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran