செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (10:10 IST)

தலைவன் சொன்னா அப்பீல் ஏது? ஒரு நோ பால் கூட இல்ல! – மிரள விட்ட சிஎஸ்கே!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற நிலையில் சிஎஸ்கேவின் பந்துவீச்சு பலரையும் வியக்க வைத்துள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டிகளில் நட்சத்திர அணிகளான மும்பை இந்தியன்ஸும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் விக்கெட்டுகளை சிஎஸ்கே அடித்து நொறுக்கியது. ரோகித் ஷர்மாவை முதலிலேயே வீழ்த்தியதுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை அணியை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பில் 157 என்ற குறுகிய இலக்கிற்குள் சுருட்டியது.

பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே அபாரமான ஆட்டத்தால் 18 ஓவர்களில் 159 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு மோசமானதாக அமைந்தது. ஸ்லோ பவுலிங், நோ பால், வைடு அதிகமாக கொடுத்ததால் இரண்டு முறை எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து கடந்த ஆட்ட முடிவில் தோனி பேசியபோது. இன்னொருமுறை ஸ்லொ பவுலிங் வார்னிங் வந்தால் சிஎஸ்கே வேறு கேப்டன் தலைமையில் விளையாட வேண்டி வரும் என எச்சரித்தார். தோனியின் எச்சரிக்கையை முக்கியமானதாக எடுத்துக் கொண்ட சிஎஸ்கே பவுலர்கள் நேற்றைய போட்டியில் ஒரு நோ பால் கூட வீசாமல் மிகவும் கவனமாக விளையாடி வெற்றியைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆரம்பம் முதலே சிஎஸ்கேவின் பவுலிங் மோசம் என சொல்லி வந்தவர்களுக்கு இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K