ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (18:49 IST)

ஐபிஎல் 16 வது சீசன்: பயிற்சியில் ஈடுபட்ட தோனி ! வைரலாகும் வீடியோ

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டியில் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஐபிஎல் -16 வது ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என  அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், ரசிகர்கள் இந்தாண்டு நடக்கவுள்ள போட்டிகளைக் காண ஆர்வமுடன் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை கோப்பை வென்றுள்ள நிலையில், இந்த ஆண்டும் இந்த வெல்லும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தோனி தலைமிலான சென்னை அணியின் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஐபிஎல்-ல் 234 போட்டிகளில் விளையாடிய தோனி 4978 ரன்கள் எடுத்துள்ளார்.

தோனிக்கு 41 வயதாகும் நிலையில், அவர் இன்னும் இளம் வீரர்களுக்கு வழி நடத்தி அவர்களுக்கு முன் மாதிரியாகவும் இருப்பதால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோனி ஓய்வு பெறும் முன்பாகவே சென்னை அணிக்கு திறமையாக கேப்டனை அவர் தேர்வு செய்வார் எனக் கூறப்படுகிறது.