1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (08:41 IST)

நாம ஜெயிச்சிட்டோம்… வடகொரிய அதிபரின் குஷிக்கு காரணம் என்ன??

கொரோனாவை வென்று விட்டோம் என  வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பெருமிதம் கொண்டுள்ளார்.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59.33 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,448,315 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 565,011,164 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,644,760 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

 
உலகமே இப்படி இருக்கையில் கொரோனாவை வென்று விட்டோம் என  வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பெருமிதம் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது நாட்டு மக்களுக்கு கூறியதாவது, கொரோனாவை வென்று விட்டோம். நம் மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. மீண்டும் ஒருமுறை நாம் இந்த உலகிற்கு நமது சிறப்பை உணர்த்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த மே மாதம் வட கொரியாவில் 48 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. ஆனால், வடகொரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒரு போதும் கிம் ஜாங் அன் வெளிப்படையாக அறிவித்தது இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது.