திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (13:54 IST)

மெர்சல் சாதனையை முறியடித்த தானா சேர்ந்த கூட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தின் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் அதிகளவில் ரீ டுவீட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்களை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இதில் இரண்டாவது லுக் போஸ்டர் அதிகளவில் ரீ டுவிட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதை இந்திய டுவிட்டர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 
 
இதனால் மெர்சல் படத்தின் போஸ்டர் இரண்டாம் இடத்திற்கு சென்றது. மேலும், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் இதுவரை பெற்ற பார்வையார்கள் கணக்கை மெர்சல் டீஸர் வெளியான ஐந்து மணி நேரத்திலே பெற்றது குறிப்பிடத்தக்கது.