செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2018 (09:29 IST)

சென்னை சிறுவனை நேரில் சந்தித்து பாராட்டிய தல தோனி

இந்திய சாதனை புத்தகத்தில் இளம் வயது கிரிக்கெட் வீரர் பட்டம் வென்ற சென்னை சிறுவனை  தல தோனி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சனுஷ் சூர்ய தேவ் கையில் கிடைக்கும் எதையும் பேட்டாக கருதி, தூக்கி போடும் எதையும் சிக்சராக விளாசும் திறமை கொண்டவன். சனுஷின் இந்தத் திறமையின் அடிப்படையில் அவருக்கு மிக இளம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கிடைத்தது. இதன்மூலம், இந்திய சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்தார்.
 
இதைப்பற்றி அறிந்த கிரிக்கெட் வீரர் தோனி, அந்த சிறுவனையும் அவனது பெற்றோரையும் நேரில் சந்தித்தார். சனுஷில் பேட்டிங் திறமையை பார்த்து வியந்த தோனி எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக வளர சனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தார். தனது தனித் திறமையால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அலாதி அன்பை பெற்றிருக்கும் தல தோனியின் இச்செயல் அவர் மீதுள்ள மரியாதையை கூட்டியுள்ளது.