சென்னையை முடித்த சண்டக்கோழி திண்டுக்கல் செல்கிறது

Last Modified புதன், 17 ஜனவரி 2018 (23:40 IST)
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'சண்டக்கோழி 2' படத்தின் சென்னை படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதனை விஷால் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஒரு நீண்ட சென்னை படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இத்துடன் இந்த படத்தின் 50% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் விஷால் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும், மீதியுள்ள 50% படப்பிடிப்பும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் விஷால் கூறியுள்ளார்.

விஷாலின் 25வது படமான 'சண்டக்கோழி 2' படத்தில் விஷாலுக்கு முதன்முதலாக ஜோடியாகிறார் கீர்த்திசுரேஷ். மேலும் இந்த படத்தில் வரலட்சுமி, ராஜ்கிரண், சூரி, உள்பட பலர் நடித்து வருகின்றனர். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :