திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:22 IST)

டி 20 உலகக்கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு

இன்னும் ஒரு மாதத்தில் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை அறிவித்து வருகின்றனர் அந்தந்த நாட்டு வாரியங்கள்.

சமீபகாலமாக வங்கதேச அணி மிக மோசமான ஃபார்மில் இருந்து வருகிறது. சமீபத்தில் ஆசியக் கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தது. கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் வங்கதேச அணியை எளிதாக வென்றது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான வங்கதேச அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு ஷகிப் அல் ஹசன் தலைமை ஏற்றுள்ளார்.

வங்கதேச அணி

ஷகீப் அல்ஹசன் (c), லிட்டன் தாஸ், தாஷ்கின் அஹமத், சபீர் ரஹ்மான், யாசிர் அலி எபோடட் ஹுசைன், மெஹதி ஹசன் மிராஜ், நூருல் ஹசன், ஹசன் மஹ்மூத், அபீப் ஹுசைன், முஸ்டாபிஜூர் ரஹ்மான், நசும் அஹ்மத், மோசாடேக் ஹுசைன், முஹம்மத் சைபுதீன், நஜ்முல் ஹுசைன்.