1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2016 (19:11 IST)

மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் ஐசிசி சரியாக செயல்படவில்லை: மெக்கலம் குற்றச்சாட்டு

மேட்ச் பிக்சிங் விவகாரங்களில் சர்வதேச கிரிகெட் கவுன்சில் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ப்ரெண்டன் மெக்கலம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.


 
 
இது குறித்து கூறிய மெக்கலம், 2008-இல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று நாடு திரும்பிய போது, முன்னாள் கேப்டன் கெயின்ஸ் என்னிடம் மேட்ச் பிக்சிங் செய்ய வலியுறுத்தினார். நான் அதை ஐசிசி மற்றும் கேப்டன் வெட்டோரியிடமும் தெரிவித்தேன்.
 
கிறிஸ் கெயின்சுக்கு எதிராக நான் பல விவரங்களை வழங்கினேன். ஆனால் ஐசிசி நிர்வாகிகள் அதை முறையாக கூட பதிவு செய்யவில்லை. ஆதாரங்களை சேகரிப்பதில் மிகவும் மெத்தனமாக ஐசிசி செயல்படுகிறது.
 
ஐசிசி ஊழல் தடுப்பு குழுவின் இந்த அலட்சியமான போக்கு மாறவேண்டும் என மெக்கலம் கூறினார்.