மீண்டும் தொடங்கும் ஐபிஎல்; 25 நாட்களில் 31 போட்டிகள்! – பிசிசிஐ திட்டம்!
இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்திருந்த நிலையில் மீதம் உள்ள 31 போட்டிகளை கடந்த ஆண்டை போல அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதற்கு அரபு அமீரகத்திலும் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. 25 நாட்களில் 31 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 4 நாட்களில் நாளொன்றுக்கு 2 போட்டிகளை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மைதானத்தில் 30% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் இறுதியான விவரங்கள் ஜூன் இறுதியில் தெரிய வரும் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.