வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (12:51 IST)

ஜோதிமணி எம்பி போட்டியிடும் கரூர் தொகுதியில் வெற்றி யாருக்கு?

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி போட்டியிடும் கரூர் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவி வரும் நிலையில் யாருக்கு வெற்றி என்பதை பார்ப்போம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி எம்பி அதிமுகவின் தம்பிதுரையை தோற்கடித்தார் என்பதும் இரண்டு முறை கரூர் தொகுதி எம்பி ஆக இருந்த தம்பிதுரையை தோல்வி அடையச் செய்த ஜோதிமணியை பார்த்து ஆச்சரியமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மீண்டும் ஜோதிமணி அதே தொகுதியில் போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கருப்பையா இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

 ஜோதிமணி மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் செண்டிமெண்டாக பேசி வாக்காளர்களை கவர்ந்து வருவதாகவும் அதனால் அவர் இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

அதிமுக சார்பில் மீண்டும் தம்பிதுரை போட்டியிட்டு இருந்தால் ஒரு வலுவான போட்டியாக இருந்திருக்கும் என்றும் தங்கவேல் மற்றும் செந்தில்நாதன் ஆகிய இருவரின் பிரச்சாரம் இந்த தொகுதியில் எடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கூட்டணி கட்சியின் வலிமை மற்றும் ஜோதிமணியின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகியவை காரணமாக மீண்டும் அவர் இந்த தொகுதியில் இருந்து எம்பி ஆக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran