ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2024 (08:26 IST)

பரபரப்பாக செல்லும் பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் போட்டி… அரையிறுதிக்கு செல்ல மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு!

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 115 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும். ஒருவேளை பங்களாதேஷ் அணி இந்த இலக்கை 13 ஓவர்களுக்குள் எட்டினால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும். 13 ஓவர்களுக்கு மேல் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லும்.

முன்னதாக நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.