128 ஆண்டுக்கால சாதனையை சமன் செய்த வங்கதேச பவுலர்கள்!

Last Modified ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (11:29 IST)

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் வங்கதேச பவுலர்கள் 128 ஆண்டுகால சாதனை ஒன்றை சமன் செய்துள்ளனர்.
 

வங்கதேசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 508 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மகமதுல்லா சதமடித்தார்.

அதன் பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வங்கதேச பவுலர்களின் தாக்குதலில் தடுமாறி விக்கெட்களை இழந்து வெளியேறினர். வெஸ்ட் இண்டிஸ் அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பாலோ ஆன் ஆனது.

இந்த இன்னிங்ஸில் முக்கியமான சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அனியின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் போல்டு ஆகி வெளியேறினர். இதற்கு முன்பு இது போன்ற நிகழ்வு 1890 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடந்த டெஸ்ட் போட்டியில் நடந்தது. அதன் பின் 128 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த சாதனையை வங்கதேசம் சமன் செய்துள்ளது.

பாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி தொடர்ந்து விளையாடி வருகிறது. தற்போதைய உணவு இடைவேளை வரை 46 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. வங்கதேச அணி 351 ரன்கள் முன்னிலையில் உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :