திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 26 ஏப்ரல் 2018 (11:31 IST)

சென்னைக்கு எதிரான போட்டி - பெங்களூர் கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடந்த  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், தாமதமாக பந்து வீசியதால் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 24-வது மேட்ச் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8  விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 68 ரன்களும், டீகாக் 53 ரன்களும் எடுத்தனர்.
 
206 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் அடித்து சூப்பர் வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் தல தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல் ராயுடு 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.