1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (08:45 IST)

இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவருக்கும் திட்டம் வைத்திருக்கோம்… பாபர் அசாம்

இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்க உள்ளது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டாணங்கள் அனைத்தும் அறிவித்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்த போட்டி பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் “இந்திய அணியில் சூர்யகுமார் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் வீழ்த்த நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம்” என நம்பிக்கையாக பேசியுள்ளார். கடந்த ஆண்டு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வென்றது.