புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (12:10 IST)

இலங்கைக்கு எதிராக டெஸ்ட்: வழக்கம்போல் சதமடித்த பாபர் அசாம்!

Babar azam
பாகிஸ்தான் கேப்டன்  பாபர் அசாம் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினாலே சதம் தான் என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அவர் சதம் அடித்துள்ளார்
 
இந்த போட்டி கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் கேப்டன் பாபர் அசாம் மட்டும் 119 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது என்பதும் அந்த அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது இலங்கை அணி 136 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்