வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (11:21 IST)

இலங்கையில் இருந்து 2 குடும்பம் அகதியாக வருகை: தனுஷ்கோடியில் மீட்ட காவல்துறையினர்

srilanka refugees
இலங்கையில் இருந்து 2 குடும்பம் அகதியாக வருகை: தனுஷ்கோடியில் மீட்ட காவல்துறையினர்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக அந்நாட்டில் வாழமுடியாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
 
இந்த நிலையில் இன்று இரண்டு குடும்பங்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டு அவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இலங்கையில் இருந்த வந்த அகதி ஒருவர் இதுகுறித்து கூறிய போது இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம் என்றும் எந்த வேலையும் வருமானமும் இல்லை என்றும் அதனால் தமிழகத்திற்கு தப்பி வந்தோம் என்றும் கூறியுள்ளார்