வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (12:15 IST)

294 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா! – களத்தில் இந்தியா!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 294 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் ட்ரா ஆனது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் நான்காவது டெஸ்ட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதலாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 எடுத்த நிலையில் இந்தியா 336 பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது முடிந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 48 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில், ஸ்மித் நின்று ஆடி அரைசதம் வீழ்த்தினார். இந்திய பவுலர்களான சிராஜ் 5 விக்கெட்டுகளையும், தாகுர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் நடராஜன் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

இந்நிலையில் தற்போது இந்தியா பேட்டிங்கில் களமிறங்கி விளையாடி வருகிறது.