1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:31 IST)

முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 233 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் 45 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது
 
இந்த போட்டியில் அலெக்ஸ் கேரி 85 ரன்களும் கேமரூன் கிரீன் 89 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர்.