வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 20 நவம்பர் 2024 (15:05 IST)

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

நவம்பர் 22 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில் இரு அணிகளும் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்களோ கோலியின் முகத்தைதான் முன்னிலைப் படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய ஊடகங்கள் அனைத்தும் கோலியின் புகைப்படத்தைப் போட்டு அவர் குறித்து கட்டுரை எழுதி வருகின்றன.

அதேபோல தொலைக்காட்சியிலும் ஆஸியின் சார்பாக பாட் கம்மின்ஸ் முகமும், இந்தியா சார்பாக கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முகத்துக்குப் பதிலாக கோலியின் முகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆஸ்திரேலியா முழுவதும் கோலி நாயகனாக முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஆஸி வீரர்களோ அவரை உளவியல் ரீதியாக வீழ்த்த முயற்சி செய்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த உரையாடலில் ஆஸி வீரர்களிடம் இந்தியாவில் இருந்து ஒரு வீரரை அணியில் எடுக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு லயன் மட்டும் தான் கோலியின் பெயரை சொல்லியுள்ளார்.  மற்றவர்கள் அனைவரும் ரோஹித், பும்ரா மற்றும் பண்ட்டின் பெயரை சொல்லியுள்ளனர். அதிலும் பேட் கம்மின்ஸ் இந்திய அணியில் இருந்து யாரும் ஆஸ்திரேலியாவுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார்.