1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin will mark the milestone in his 100th test

முரளிதரனுக்கு அடுத்து அஸ்வின்தான்… 100 ஆவது டெஸ்ட்டில் படைக்கப் போகும் சாதனை!

இந்தியா
சமீபத்தில் இந்திய அணியின் சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது பவுலராகவும், இந்திய அளவில் இரண்டாவது பவுலராகவும் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இதையடுதது இன்று தரம்சாலாவில் நடக்க உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டி அவருக்கு 100 ஆவது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. இந்த சாதனையைப் படைக்கும் முதல் தமிழக வீரராக அஸ்வின் உருவாகியுள்ளார். இந்நிலையில் 100 ஆவது போட்டியில் விளையாடும் அவர் 507 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் 100 ஆவது போட்டியில் விளையாடும் ஒரு வீரர் வீழ்த்திய விக்கெட்களின் அடிப்படையில் ஒரு மைல்கல்லை எட்ட உள்ளார். முரளிதரன் 100 போட்டிகளை முடித்த போது 584 விக்கெட்களை வீழ்த்தியதே இதுவரை அதிகமாக உள்ளது. அவருக்கு அடுத்து அஸ்வின் 507 (இந்த போட்டியில் விக்கெட் வீழ்த்தினால் எண்ணிக்கை அதிகமாகும்) விக்கெட்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் கும்ப்ளே 478 விக்கெட்களோடு உள்ளார். 
About Writer
vinoth