நாய் வண்டி வரட்டும் உன்னை பிடிச்சி கொடுக்குறேன்: ரசிகரை திட்டிய அஸ்வின்


Caston| Last Updated: வியாழன், 31 மார்ச் 2016 (18:56 IST)
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

 
 
இந்தியா, மேற்கு இந்திய அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியில் விராட் கோலியும், மேற்கு இந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெயிலும் முக்கிய வீரர்களாக உள்ளனர்.
 
கிறிஸ் கெயிலை வீழ்த்த அஸ்வினை தோனி பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பலமுறை அஸ்வின் பந்தில் கெயில் ஆட்டமிழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர், இன்றைய போட்டியில் கிறிஸ் கெயில் சிக்ஸர் மழை பொழிந்து வெஸ்ட் இண்டீஸ் அணியே வெற்றி பெறும் என்றும், இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இனி நான் கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன், எனவும் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை கிரிக்கெட் ரசிகரின் இந்த டுவிட்டுக்கு பதில் அளித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், நீங்கள் கிரிக்கெட் பார்க்கலனா உங்க குடும்பத்திற்கு நல்லது தான். வேற எதாவது வேலை பாருங்க என்று கூறினார். நான் கிரிக்கெட் பார்க்க மாட்டேன் ஆனா, நீங்க தோக்குறத பார்ப்பேன் என்று அந்த ரசிகரும் திருப்பி பதில் அளித்தார்.
 
இதனால் சற்று கோபமடைந்த அஸ்வின், நாய் வண்டி வரட்டும் உன்னை பிடிச்சி கொடுக்குறேன். நாளைக்கு எது நடந்தாலும் எனக்கு கவலையில்லை, நீ கிரிக்கெட் பார்க்கிறத நிறுத்திடு என்று பதில் அளித்தார். அஸ்வின் இலங்கை ரசிகரை நாய் என்று திட்டியதாக இலங்கை ரசிகர்கள் அவருக்கு எதிராக டுவிட் செய்தனர். ஆனால் இந்திய ரசிகர்கள் அஸ்வினுக்கு ஆதரவாக டுவிட் செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :