அஸ்வினுக்கு இந்திய அணியில் உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை… ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.
உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது பவுலராகவும், இந்திய அளவில் இரண்டாவது பவுலராகவும் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் “அஸ்வின் ஒரு மிகச்சிறந்த வீரர். இந்திய அணியில் பங்காற்றியதற்கு உரிய அங்கிகாரத்தைப் பெறவில்லை. ” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் “அஸ்வின் இந்திய அணிக்கே கேப்டனாகி இருக்க வேண்டியவர்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.