வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (14:12 IST)

114 ஆண்டு கால சாதனையை எட்டிய அஸ்வின்! – முதல் பந்திலேயே விக்கெட்!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்களும், இந்தியா 337 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி நடந்து வரும் நிலையில் இங்கிலாந்து அணி 25 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்தில் முதல் ஓவரில் முதல் பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து வீரர் ஜோசப் பர்ன்ஸ் விக்க்கெட்டை வீழ்த்தினார். கடந்த 114 ஆண்டுகால கிரிகெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என அஸ்வின் இதன்மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.