வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (16:14 IST)

நூல் இழையில் மிஸ் ஆன சதம்; சொதப்பிய பண்ட்! – முதல் இன்னிங்ஸில் சேஸ் செய்யுமா இந்தியா?

இங்கிலாந்து – இந்தியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடிக்க இருந்த நிலையில் 9 ரன்களில் அவுட் ஆனார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கிய இங்கிலாந்து அணி 190 ஓவர்கள் வரை விளையாடியது. இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக ஜோ ரூட் இரட்டைசதம் அடித்து சாதனை புரிந்தார்.

இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 578 ரன்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக களம் இறங்கியுள்ள இந்திய அணி 62 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 6 ரன்களிலும், ரஹானே 1 ரன்னிலும் அவுட் ஆனது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே சமயம் புஜாரா 73 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்து வந்த நிலையில் அவுட் ஆனார். ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 91 ரன்கள் எடுத்திருந்தார். சதம் அடிக்க 9 ரன்களே இருந்த நிலையில் அவரும் அவுட் ஆனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.