செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 மே 2022 (15:40 IST)

கொரோனா ஜீரோ ஆகும் வரை... தனிமையில் வாடும் சீன மக்கள்!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவந்த நபர்களையும் ஹோட்டல்களில் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என சீனா உத்தரவு. 
 
சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது தலைநகர் பீஜிங்கில் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது. 
 
பீஜிங்கில் மட்டும் 2 கோடி மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பீஜிங் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து சீனாவின் பெய்ஜிங் நகரில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவந்த நபர்களையும் ஹோட்டல்களில் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா  பாதிப்பு முற்றிலும் ஓய்ந்து பூஜ்ஜியம் ஆகும் வரை அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விடாமல் பின்பற்றும் வழக்கத்தை கொண்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.