துபாயில் பதுங்கிய அப்ரிடி: டுவிட்டரில் மன்னிப்பு வீடியோ


Caston| Last Modified புதன், 30 மார்ச் 2016 (18:26 IST)
டி20 உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ரசிகர்களுக்கு பயந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடி துபாயில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 
 
உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா வந்த அப்ரிடி, இந்தியாவையும், இந்திய ரசிகர்களையும் புகழ்ந்து பேசியது அங்கு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தோல்வியடைந்து வெளியேறிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
 
இதனால் தற்போது பாகிஸ்தான் சென்றால் கோபத்தில் உள்ள ரசிகர்கள் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் அவர் துபாயில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அப்ரிடி ரசிகர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற முடியமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :