எந்த காரணத்தைக் கொண்டும் அவரை அணியை விட்ட நீக்கக் கூடாது… இந்திய அணி பற்றி ஆகாஷ் சோப்ரா!
50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடக்க நவம்பர் 9 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் இந்தியாவிலேயே நடக்கிறது. இந்த தொடருக்கான முதல்கட்ட அணிகளை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முன்னதாக 15 பேர் கொண்ட அணிகளை அறிவிக்க வேண்டும்.
இந்திய அணி தற்போது உலகக் கோப்பைக்காக தயாராகி வரும் நிலையில் அணித்தேர்வு மிகவும் கடினமான ஒன்றாக அமையும் என சொல்லலாம். ஏனென்றால் அணியில் பல இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி சமீபகாலமாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா “இந்திய அணியில் எக்காரணம் கொண்டும் முகமது சிராஜ் இல்லாமல் இருக்கக் கூடாது. அவர் அணிக்கு மிகவும் முக்கியமானவர். அவரின் சமீபத்தைய பங்களிப்புகளை வைத்துப் பார்க்கும் போது அவர் பூம்ரா மற்றும் ஷமியை விட முக்கியமானவர் என்பதைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.