திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (13:33 IST)

கேப்டன் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடலாம்-விஜய் பிரபாகரன்

தேமுதிக  தலைவர் விஜயகாந்தின்  பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடலாம் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் 80, 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த்.  இவர், கடந்த  2005 ஆம் ஆண்டு மதுரையில் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்.

.அரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து, கடைக்கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டுமென்பதை கட்சியின் கொள்கைகளில்  ஒன்றாகவுள்ளது.

விஜய்காந்த்  முன்பு போன்று ஆக்டிக்வாக இல்லை. அவர் உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

நேற்று இதுபற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரது மகன் விஜய் பிரபாகரன், விஜயகாந்த் உடல் நிலையில் சற்று பின்னடைவுதான் என்று கூறியிருந்தார்.

இதனால் விஜயகாந்த் ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து விஜய்பிரபாகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

’’கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்... வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கிறது…இணைப்பை திறந்து நான் பேசியதை பாருங்கள் அப்போது புரியும் நன்றி!!

கட்சியினர் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்
வழக்கம் போல் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.