வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (09:31 IST)

இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்க 80 சதவீத வாய்ப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்கும் பகுதியில் மழை பெய்ய 80 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பைக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் அணிகளின் செயல்பாடு மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஆகியவை பற்றி கணித்து கூறி வருகின்றனர்.

இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டாணங்கள் அனைத்தும் அறிவித்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன.