வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (10:02 IST)

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு 230 ரன்கள் இலக்க்கு கொடுத்த இந்தியா!

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் யாஷ்டிகா அபாரமாக விளையாடிய 50 ரன்களும் வெர்மா 42 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இன்னும் சிறிது நேரத்தில்  வங்கதேச அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியா இங்கிலாந்து நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள்  4 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் இந்திய அணி இன்று வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது