உலகக்கோப்பைக்கு பின்னர் ஓய்வு? சோயிப் மாலிக் தகவல்!

Last Updated: செவ்வாய், 26 ஜூன் 2018 (17:04 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக் உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். 
 
சோயிப் மாலிக். கடந்த 1999 ஆம் ஆண்டு விண்டீஸ் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் பாஸ்தான் அணிக்காக 261 ஒருநாள் (6975 ரன்கள், 154 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 
 
இந்நிலையில் சோயிப் மாலிக் தன் ஓய்வு திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, 2019 உலகக்கோப்பை தொடர்தான் என் கடைசி, ஒரு நாள் கிரிக்கெட் தொடராகும். அதற்கு பின் பிட்டாக இருந்தால் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். 
 
அணியில் இருக்கும்போது, உலகக்கோப்பை டி20 , சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகக்கோப்பை தொடருக்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டும் உடல் ஃபிட்டாக இருக்கும்வரைதான் விளையாட முடியும் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :