அசராமல் அடித்த ஆஸ்திரேலிய அணிக்கா இந்த நிலைமை!

Australia
Last Updated: திங்கள், 18 ஜூன் 2018 (15:52 IST)
உலக கிரிக்கெட் அணிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அணியாக திகழ்ந்த ஆஸ்திரேலியா அணி தற்போது பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 
ஆஸ்திரேலிய அணி மற்ற அணிகளை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதுவரை ஐந்து முறை உலக கோப்பை வென்றுள்ளது. வார்ணர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை அணியில் விளையாட தடை விதிக்கப்பட்ட பின்னர் அணியின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது.
 
ஆஸ்திரேலியா அணி பலமுறை தொடர்ந்து உலக தர வரிசை பட்டியலில் முதலிடம் இருந்து குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்த பின்னர். ஒருநாள் தர வரிசை பட்டியலில் 6 இடத்திற்கு தள்ளப்பட்டது.
 
மேலும் ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் 13 போட்டிகளில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :