1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. வீரர்கள்
  4. Painting tribute to the late Australian cricket legend

மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவானுக்கு ஓவிய அஞ்சலி!

Painting tribute
மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே படத்தை கிரிக்கெட் மட்டையாலே வரைந்து பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஓவிய அஞ்சலி செலுத்தினார். 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை  சு.செல்வம் அவர்கள் கிரிக்கெட் மட்டையை கொண்டு ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னே உருவத்தை வரைந்தார்.
 
ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு கிரிக்கட் ஜாம்பவான்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் வார்னே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரஷ்  பயன்படுத்தாமல் வெறும் கிரிக்கெட் மட்டையாலே..! வார்னே படத்தை 15 நிமிடங்களில் வரைந்து  ஓவிய ஆசிரியர் செல்வம் ஓவிய அஞ்சலி செலுத்தினார்.
அடுத்த கட்டுரையில்
டெஸ்ட் போட்டி: இந்திய அணி 574 ரன்கள் எடுத்து டிக்ளேர்