நீங்க வெர்ஜின் பொண்ணா...? ரசிகர் கேட்ட கேள்வியால் சீறி பாய்ந்த நடிகை!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதனால் அவரவர் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். நடிகர், நடிகைகளுக்கும் ஷூட்டிங் இல்லாததால் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் உரையாற்றினார். அப்போது பெயர் குறிப்பிட விரும்பாத அவரது ரசிகர் ஒருவர் "நீங்க விர்ஜினா?" என கேள்வி கேட்டு ஒரு நிமிடம் அவரை சங்கடத்தில் ஆழ்த்தினார்.
பின்னர் அந்த கேள்விக்கு பதிலளித்த நடிகை சம்யுக்தா, விர்ஜின், செக்ஸ், ஆல்கஹால் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி நீங்கள் கேட்டால் இந்த காலத்து பெண்கள் பயந்துவிடுவார்கள் என நினைக்கிறீர்களா..? அப்படியில்லையென்றால், இப்படி கேள்வி கேட்டால் மற்றவர்களிடம் இருந்து தனிப்பட்டு தெரிவோம் என்பதால? பார்த்து பத்திரமாக இருங்கள் யாரவது அடித்துவிட போகிறார்கள் எதிர்வரும் காலத்தில் நீங்கள் பெரிய பிரச்னையை சந்திப்பீர்கள் என கோபத்துடன் பதிலளித்தார். இவர் தமிழில் "ஜூலை காற்றில்" என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.