செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (21:16 IST)

சக்ரா திரைப்படத்தின் புதிய தீம் வெளியீடு!

விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
இதற்கான பேச்சுவார்த்தைக் கூட முடிந்த நிலையில் இப்போது கடைசி நேரத்தில் சக்ரா திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய விஷால் முடிவெடுத்துள்ளாராம். இதற்குக் காரணம் சமீபத்தில் தியேட்டரில் ரிலீஸாகி பெருவெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படமே என சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் தற்ப்போது அதற்கான வேளைகளில் மும்முரமாக றங்கியுள்ள படக்குழு தற்ப்போது படத்தின் ப்ரோமோஷனாக  Scream of Darkness என்ற புதிய தீம் ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார் . யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த தீம் பயங்கரமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்