வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌கி‌றி‌ஸ்ம‌ஸ்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 25 டிசம்பர் 2019 (10:48 IST)

#MerryChrismas: ஜனவரி 6 ஆம் தேதி தான் கிறிஸ்துமஸா??

கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு விழா, கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். 
 
கிறிஸ்துமஸ் பண்டிகையன்று கிறிஸ்துமஸ் குறித்த சில சுவாரசிய தகவல்களை இதோ... 
1. ஏசு கிறிஸ்து மேற்காசியாவில் உள்ள பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள பெத்தலேகம் நகரில் பிறந்தார். பெத்தலேகம் என்பதற்கு "அப்பத்தின் வீடு" எனப்பொருள்
 
2. இயேசு என்பதன் எபிரேய மொழி மூலச்சொல் 'யெஷ வா'. இதற்கு கடவுள் விடுவிக்கிறார் என்பது பொருள்
 
3. கிறிஸ்து என்பது கிரேக்க சொல். இதற்கு அருட்பொழிவு பெற்றவர் என்று பொருள்.
 
4. முதன் முதலில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஜனவரி 6 ஆம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
 
5. கி.பி 336-ல் அப்போதைய போப் முதலாம் ஜூலியஸ் டிசம்பர் 25 ஆம் தேதி தான் கிறிஸ்துமஸ் என அங்கீகரித்தார்
 
6. இயேசு பிறந்த இடமான பெத்லகேமில் உள்ள 'சர்ச் ஆப் நேட்டிவிட்டி' என்ற தேவாலயத்தில், கோலாகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்படுகிறது
 
7. பல நாடுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி ஆட்டம் பாட்டத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். அலங்கரித்த குதிரை ஊர்வலத்தில், பக்தர்கள், மதக்குருக்கள், கன்னியாஸ்திரிகள் பங்கேற்பர்.
 
8. 1800-ம் ஆண்டு வரை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்கள் வழங்கி கொள்ளும் பழக்கம் இருக்கவில்லை.
 
9. 1840-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது.
 
10. கி.பி.1223-யில் புனித பிரான்ஸிஸ் அசிசி என்பவர் முதன் முதலில் கிறிஸ்துமஸ் குடில் வைத்ததாக கூறப்படுகிறது.

11. பெரிய கிறிஸ்துமஸ் கேக்குகளில், தங்க நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வியப்பு ஏற்படும் வகையில் பரிசளிப்பது, ஐரோப்பிய நாடுகளில் வழக்கம்.

12. சாண்ட்டா கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தான், கிறிஸ்துமஸ் நாளின் பிரதான நிகழ்வாக பரிசுப்பொருட்கள் வழங்கி கொள்ளும் வழக்கம் துவங்கியுள்ளது.