1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
  4. Fruits that protect your baby during pregnancy Period...!!

கர்ப்பக் காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் காக்கும் பழங்கள்...!!

கர்ப்ப காலம்
கர்ப்பக் காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் அடங்கிய உணவை எடுத்துக்கொள்வதால் குழந்தை பிறப்பில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் குறையக்கூடும். வைட்டமின் C,D, இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்துக்கள் துத்தநாகம்,  ஐயோடின் போன்ற சத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 
திராட்சையில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம் போன்றவை அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் தாராளமாக இதை  சாப்பிடலாம்.
 
பேரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் அதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை கிடைக்கும். மேலும் தேவையற்றக் கழிவுகளை அகற்றும். கர்ப்பிணிகள் மட்டுமல்லாமல் பால் கொடுக்கும் தாய்மாருக்கும் பேரிக்காய் ஏற்றது.
 
மாதுளம் பழத்தில் கர்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. கரிப்பிணிகள் தொடர்ந்து மாதுளம் பழத்தை சாப்பிட்டால், தாய்க்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் தேவையான அளவு சத்து கிடைக்கும்.
 
கர்ப்பிணிகள் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணிப் பழங்களை சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளது.
 
ஆரஞ்சிபழத்தில் வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் உள்ளது. குழந்தைப் பிறக்கும்போது உணடாகும் பிரச்சனையைத் தடுக்கும். தினமும் ஒரு  டம்ளர் ஆரஞ்சுச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
 
வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதாம் சிவப்பணுக்கள்  குறைபாடு, ரத்தசோகை ஆகியவற்றுக்கு இது அருமருந்தாகும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்....!