வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 2 அக்டோபர் 2019 (16:03 IST)

பல வகை வாழைப்பழங்களில் உள்ள மருத்துவ நன்மைகள்..

தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்து கொண்டால் உணவை நன்கு செரிப்பதோடு, மலசிக்கல் ஏற்படாமல் காக்கும். முக்கனிகளில் ஒன்று வழைப்பழம். வாழைப்பழங்களில் பல வகைகள் உண்டு.  
 
வாழைப்பழம் எல்லா காலங்களிலும், எல்லா இடத்திலும் கிடைக்கக் கூடிய பழம். இதை ஏழைகளின் பழம் என்றும் கூறுவர்.  வாழைப்பழம் மஞ்சள் காமாலை மற்றும் சளி, காய்ச்சலை குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளது. 
 
செவ்வாழை: செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்குகிறது. 
 
நரம்புத் தளர்ச்சியை போக்கும் இவ்வகைப் பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும். 
 
பூவன்: பூவன் பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்ககூடியப் பழம். இது ஜீரண சக்தியுடையது. தினமும் உண்விற்க்கு பின் உண்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாக்காது. 
 
ரஸ்தாளி: ரஸ்தாளி பழம் சாப்பிடுவதனால் கண்ணுக்கும், உடல் வலுவுக்கும் நல்லது. சுவை மிகுந்த இப்பழத்தை உண்டு வந்தால் இதயம் பலப்படும். 
 
பேயன்: பேயன் பழம் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக உடலை வைக்கிறது. 
 
பச்சை: பச்சை வாழைப்பழம் நல்ல கிளிர்ச்சியை தரும் கோடைக்காலத்தில் தாரளமாக உண்ணலாம். வாதம் நோயாளிகள் குறைத்து கொள்வது நல்லது. 
 
கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி பழம் கண்ணுக்கு குளீர்ச்சியைத் தரும்.