புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By

தாய்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா...?

பாலூட்டும் தாய்மார்கள், வழக்கமான அளவை விட 500 கலோரிகள் அதிகமாக தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும், அதேபோல, புரதங்கள், கார்போஹைட்ரேட்கள், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவற்றை சமநிலையில் எடுத்துக் கொள்ள  வேண்டும்.
தாய்ப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஆன்டிஜென்களும் ஆன்டிபாயடிகளும் நிறைந்திருப்பதால், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து குழந்தைகள் போராட முடியும். குழந்தையின் முதல் ஆறு மாதங்களே, ஒட்டுமொத்த குழந்தைப்பருவத்தின்  நலவாழ்வைத் தீர்மானிக்க அவசியமானவை.
 
ஓட்ஸ், முழு கோதுமை, கீன்வா, பார்லி, ரை மற்றும் இதுபோன்ற பல முழு தானியங்கள் வைட்டமின் பி மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்களின் முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன. அவை, ரத்த சர்க்கரை அளவுகளைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்திற்கும்,  நல்ல தரமான பால் உற்பத்திக்கும் வழி வகுக்கும்.
ஓட்ஸ், முழு கோதுமை, கீன்வா, பார்லி, ரை மற்றும் இதுபோன்ற பல முழு தானியங்கள் வைட்டமின் பி மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்களின் முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன.
 
முதலில், நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உங்கள் உடலின் ஆற்றல் குறைந்துப்போகாமல் இருக்கவும் தண்ணீர் தேவை. இரண்டாவதாக, உடலின் பால் உற்பத்தியை தண்ணீர்  அதிகரிக்கும். ஃப்ரெஷ் சூப்கள், பழங்கள், காய்கறிகளின் ஜூஸ்கள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் நிறைய எடுத்துக்  கொள்ளலாம். 
 
குழந்தையின் பால் குடிக்கும் செயல்பாடு, உடலில் ஆக்ஸிடோசினை வெளியிட்டு, கர்ப்பப்பையை வேகமாக குணமாக்குகிறது. குழந்தைப்பேற்றுக்குப் பின்பு உடலின் அதிகப்படியான எடையை குறைப்பதிலும் தாய்ப்பாலுட்டுவது உதவுகிறது.