திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. செலிபிரட்டி பயோடேட்டா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 25 மே 2020 (12:47 IST)

அசுரன் மஞ்சு வாரியரா இது.... பிரமிக்கவைக்கும் கயட்டம் போஸ்டர்!

மலையாள மகாநாடி மஞ்சு வாரியார் தமிழில் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்.  அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆனால், அவர் சாதரணமாக ஒரு படத்தை தேர்வு செய்யமாட்டார்.

தற்போது 41 வயதாகும் இவர் வித்தியாசமான, குடும்ப பாங்கான, தனது கதாபத்திரம் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என நினைப்பவர்.  17 வயதில் திரைத்துறைக்கு நடிக்க வந்த மஞ்சு வாரியார் தேசிய விருது, கேரளா மாநில விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்டவற்றை பெற்று சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார்.

அந்தவகையில் தற்போது தனது திறமையை வித்யாசமாக வெளிப்படுத்தும் விதத்தில் "கயட்டம்" என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். சற்றுமுன் இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ட்ரெண்ட் ஆகியுள்ளது. அந்த போஸ்டரில் செம மாடர்ன் உடை அணிந்து கூலிங் க்ளாஸ் போட்டுகொண்டு வித்யாசமாக தோற்றமளிக்கும் மஞ்சு வாரியரை பார்த்து அனைவரும் ஷாக்காகி விட்டனர். போஸ்டரை பார்க்கும்போதே படம் செமயா இருக்கும் என்று கூறி வருகின்றனர்.