புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2019 (12:03 IST)

ஆத்தாடி...அசுரன் பட நடிகையா இது! - புகைப்படத்தை பார்த்து ஜர்க்கான நெட்டிசன்ஸ்!

மலையாள மகாநாடி மஞ்சு வாரியார் தமிழில் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். 


 
அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது 41 வயதாகும் இவர் இதுவரை  குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். ரியல் வாழ்விலும் மஞ்சு வாரியார் அப்படிதான் என ரசிகர்கள் தங்கள் மனதில் கோட்டை கட்டி ரசித்து வந்த நிலையில் தற்போது அனைவருக்கும் பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிகினி உடையணிந்து கடற்கரையில் ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார். 


 
இந்த புகைப்படம் வெளியுலகத்திற்கு எப்படியோ கசிந்து விட தற்போது இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்து மஞ்சுவாரியரின் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளனர் நெட்டிசன்ஸ். இருந்தாலும் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஒரு சிலர் இது மஞ்சு வாரியரே இல்லை என்றும் கூறி வருகின்றனர்