ரூ.15 கோடி நகைகள் திருட்டு: அதிர்ச்சியளித்த அழகர்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 24 மார்ச் 2017 (16:27 IST)
நெல்லை மாவட்டம் ஆழகர் ஜுவல்லர்ஸ் கடையில் ரூ.15 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
நெல்லை மாவட்டம், மகாராஜநகரை சேர்ந்த பாபு என்பவரும், அவரது சகோதரர்களும் இனைந்து அழகர் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் கிளை வைத்துள்ளனர்.
 
பாளையங்கோட்டையில் பாபு என்பவர் அழகர் ஜுவல்லர்ஸ் கடையை பாபு நிர்வகித்து வருகிறார். இன்று காலை 10 மணி அளவில் கடையைத் திறந்தபோது, கடையை காலி செய்தது போல் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாபு உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார்.
 
காவல்துறையினர் நடத்திய சோதனையில், கடையின் மாடியில் உள்ள இரும்புக்கதவை கேஸ் வெல்டிங் மூலம் அறுத்துவிட்டு மர்மக் கும்பல் உள்ளே நுழைந்தது தெரியவந்தது. காவல்துறையினர் சோதனைக்கு பின் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் ரூ.15 கோடி மதிப்பு இருக்கும் என தெரிவித்தனர்.
 
மேலும் காவல்துறையினர் கடையில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுப்படுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :