திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (12:36 IST)

பாலிவுட் ஜோடிப்புறா தீபிகா ரன்வீர்-க்கு இன்று திருமணம்

பாலிவுட் காதல் ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் திருமணம் இன்றும் நாளையும் இத்தாலியில் கோலாகலமாக  நடைபெறுகிறது.
 
இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில், வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில் திருமணம் நடைபெற உள்ளது. இன்று கொங்கனி முறைத் திருமணமும், நாளை ஆனந்த் கராஜ் முறை திருமணமும் நடைபெற உள்ளன. 
 
தங்கள் திருமணத்திற்காக அழகிய நகரமான லேக் கோமாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருமணத்திற்காக இந்தியாவிலிருந்து மொத்தம் நாற்பது பேர் மட்டுமே இத்தாலி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதில் ஒருவர் கூட திரைத்துறையைச் சார்ந்தவர்கள் இல்லையாம். தீபிகா, ரன்வீரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமண விழாவுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினரையும் மிகுந்த மரியாதையோடு இருவரும் சேர்ந்து வரவேற்றுள்ளனர். 
 
திருமணம் முடிந்தபிறகு நவம்பர் 21ஆம் தேதி பெங்களூருவிலும்,28 ஆம் தேதி மும்பையிலும் மிகப்பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அதற்கு முக்கிய பிரமுகர்களுக்கும் திரையுலகினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.