அவரெல்லாம் ஒரு அண்ணனா? செருப்பை கழட்டி தன்னைத்தானே அடித்து கொண்ட ஸ்ரீரெட்டி

Last Modified செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (13:07 IST)
ஸ்ரீரெட்டி என்ற பெயரை கேட்டாலே தெலுங்கு திரையுலகினர் நடுங்கும் வகையில் அவர் தினந்தோறும் ஒரு பெரிய மனிதரின் முகமூடியை கிழித்து அவர்களுடைய சுயரூபத்தை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் இன்று அவரிடம் சிக்கியவர் பவர்ஸ்டார் பவன்கல்யாண்
ஸ்ரீரெட்டி அடுக்கடுக்காக புகார்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த புகார்களை மீடியாக்கள் முன் தெரிவிக்காமல் போலீசில் புகார் செய்யும்படி பவன்கல்யாண் ஸ்ரீரெட்டிக்கு அறிவுரை வழங்கினார். இந்த அறிவுரைக்கு தனது டுவிட்டரில் நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி திடீரென என்ன நினைத்தாரோ, மீடியாவை அழைத்து பவன்கல்யாணை வறுத்தெடுத்துள்ளார்.
பவன்கல்யாணை எனது சொந்த அண்ணன் போல் நினைத்து அவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன். ஆனால் இன்று அதற்காக வெட்கப்படுகிறேன் என்று கூறி உடனே தனது காலில் இருந்த செருப்பை கழட்டி தன்னைத்தானே அடித்து கொண்டார். மேலும் பவன்கல்யாணை விரலால் ஆபாசமாக சைகையும் செய்தார். இதனால் பவன்கல்யாண் ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி டுவிட்டரில் பவன்கல்யாணுக்கு நன்றி தெரிவித்துவிட்டு திடீரென அவரை விமர்சனம் செய்வது ஏன் என்றும் அனைவருக்கும் புரியாத புதிராக உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :