1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (15:31 IST)

சிறுமி ஆஷிஃபாவின் கொலையை நியாயப்படுத்திய வங்கி துணை மேலாளர் மீது வழக்குப் பதிவு

நாட்டில் பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக குழந்தை வன்கொடுமை அதிகளவில் உள்ளது. 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா, கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சி கோடக் மஹேந்திரா துணை மேலாளராக பணிபுரிந்து வந்தவன் விஷ்ணு நந்தகுமார். இக்கொடூர சம்பவம் குறித்து, முகநூலில் இவன் பதிவிட்டிருந்த கருத்தில் "நல்ல வேளையாக இச்சிறுமி 8 வயதிலேயே கொல்லப்பட்டுவிட்டார், இல்லையென்றால் இவள் வளர்ந்து இந்தியா மீது வெடிகுண்டு வீசுவார் என்ற அருவருக்கத்தக்க பதிவை வெளியிட்டிருந்தான்.
 
பொதுமக்கள் பலர்  விஷ்ணு நந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவனை வங்கியில் இருந்து தூக்கிமாறும் வேண்டுகோள் விடுத்தனர். வங்கி வெளியிட்ட அறிக்கையில் விஷ்ணு நந்தகுமாரை ஏப்ரல் 11, 2018ம் தேதியே பணிநீக்கம் செய்து விட்டோம் என்றும் எங்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் இது போன்ற மோசமான கருத்தை பதிவிடுவது எங்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது என்றும் தெரிவித்தனர். மேலும் விஷ்ணு நந்தகுமாருக்கு கருத்திற்கு எங்களின் கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறோம் என வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து அவதூறு பரப்பியதாக விஷ்ணு நந்தகுமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவு, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.